< Back
சினிமா செய்திகள்
Suriya starrer fantasy movie Kanguva to premiere in theaters on Diwali 2024

image courtecy:twitter@CinemaWithAB

சினிமா செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகிறதா கங்குவா? - உற்சாகத்தில் ரசிகர்கள்

தினத்தந்தி
|
19 May 2024 9:11 AM IST

தீபாவளி பண்டிகையன்று 'கங்குவா' படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தன. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார். சமீபத்தில் இப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம், வரும் தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்