< Back
சினிமா செய்திகள்
ஆண்ட்ரியா படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட சூர்யா
சினிமா செய்திகள்

ஆண்ட்ரியா படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட சூர்யா

தினத்தந்தி
|
21 Dec 2022 9:26 PM IST

ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது


கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்