இன்னொரு படத்தில் இருந்தும் சூர்யா விலகலா?
|வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த ‘வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலக சூர்யா முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
பாலா இயக்கத்தில் நடித்த 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா சமீபத்தில் விலகியது பரபரப்பானது. இதன் படப்பிடிப்பை சில நாட்கள் நடத்தி முடித்தனர். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.
இந்த நிலையில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. சில மாதங்கள் கழித்து 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிக்கிறார். இந்த நிலையில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலக சூர்யா முடிவு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
வாடிவாசல் படத்தை எடுப்பதற்கான அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டனர். பட வேலைகள் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் படக்குழுவினர் தரப்பில் சூர்யா விலகவில்லை என்றும், வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.