இந்தி படத்துக்கு ஒப்பந்தம்? மும்பையில் சூர்யா, ஜோதிகா
|நேரடி இந்தி படமொன்றில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை இந்தி டைரக்டர் பரூக் கபீர் இயக்க இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
சூரரை போற்று படத்துக்கு தேசிய விருதை பெற்ற சூர்யா உற்சாகமாக இருக்கிறார். இந்த படம் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி பதிப்பிலும் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இது தவிர நேரடி இந்தி படமொன்றில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை இந்தி டைரக்டர் பரூக் கபீர் இயக்க இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
இந்த நிலையில் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் திடீரென்று மும்பை சென்றுள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புதிய இந்தி படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட சூர்யா மும்பை சென்று இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சூர்யா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. சூர்யா தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, ஞானசேகர் ஆகியோரும் சூர்யா படங்களை அடுத்தடுத்து எடுக்கும் டைரக்டர்கள் பட்டியலில் உள்ளனர்.