இந்தி படத்தில் சூர்யா
|தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா ஏற்கனவே ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி, தெலுங்கில் தயாரான ரத்த சரித்திரா படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் சரித்திர கதையம்சம் கொண்ட ஒரு இந்தி படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் ஓம்பிரகாஷ் மவுரியா டைரக்டு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே சிவாஜி கணேசன் நடிப்பில் கர்ணன் படம் தமிழில் உருவானது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை அடுத்த வருடம் தொடங்க உள்ளனர்.
சூர்யா தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் படமும் கைவசம் உள்ளது. சூரரை போற்று படத்தை எடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.