சரித்திர கதையில் 5 வேடங்களில் சூர்யா?
|சரித்திர கதையில் 5 வேடங்களிலும் சூர்யாவே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலா இயக்கிய வணங்கான் படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது சூர்யாவுக்கு 42-வது படம். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் தயாராகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்கின்றனர். இதில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரங்கள் இருப்பதாக அறிவித்து உள்ளனர். இந்த 5 வேடங்களிலும் சூர்யாவே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்கள் பலர் இதுவரை இரட்டை வேடங்களிலும், 3 வேடங்களிலும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் மட்டும் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யா 5 வேடங்களில் நடிக்க இருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சரித்திர கதையில் கதாநாயகன் 5 வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்கின்றனர். இதில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.