< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா
சினிமா செய்திகள்

'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சூர்யா

தினத்தந்தி
|
10 Jan 2024 7:50 PM IST

சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'கங்குவா' படத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்