< Back
சினிமா செய்திகள்
பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா!
சினிமா செய்திகள்

பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா!

தினத்தந்தி
|
5 Oct 2024 4:05 PM IST

இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது. தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவும் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் (ஐஐஎப்ஏ) நிகழ்ச்சியில் இயக்குனர் ராகேசிடம் சூர்யாவின் அடுத்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் ராகேஷ், "100 சதவிகிதம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'கர்ணா' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராகேஷ் 'பாக் மில்கா பாக்', 'தூபான்' போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்