< Back
சினிமா செய்திகள்
சூர்யா 42 : 3 கதாபாத்திரங்களில் சூர்யா
சினிமா செய்திகள்

'சூர்யா 42' : 3 கதாபாத்திரங்களில் சூர்யா

தினத்தந்தி
|
2 Sept 2022 2:48 PM IST

சூர்யாவின் 42-வது படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு பிறகு பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் சூர்யா நடித்துவந்தார். இந்த படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டார். இது சூர்யாவுக்கு 42-வது படமாகும்.

இந்தப் படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதற்கிடையில் 'வணங்கான்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டது. இதனால் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, விரைவில் பாலாவுடன் சூர்யா கைகோர்க்க உள்ளார். 'வணங்கான்' படத்தில் மீனவராக சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் 'நந்தா', 'பிதாமகன்' படங்களில் சூர்யா நடித் திருக்கிறார். 'அவன் இவன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்