சூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை
|நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'புதிய தொடக்கம்' எனக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
இது இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாகும். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை சூர்யாவுக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் இடையே கிட்டத்தட்ட 2.5 வருடங்களாக நடந்து வந்ததாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது,
'2.5 வருடங்களுக்கு முன்பே சூர்யா 44 படம் குறித்தான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஆனால் அதன்பிறகு, கார்த்திக்கும் சூர்யாவும் மற்ற படங்களில் பிஸியாகி விட்டனர். எனவே, அவர்கள் சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். எப்போது ஒன்றாக வேலை செய்வோம் என்று ஆர்வமாக இருந்தனர். அதற்கு சிறிது காலம் ஆகின. ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது.
தற்போது படம் குறித்தான தகவல் அதிகமாக கசிகிறது. இதனால் ரகசியத்தை பாதுகாப்பது முக்கியமானது. சரியான நேரம் வரும் வரை நாங்கள் அதை பாதுகாத்து வந்தோம். இந்தப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை சூர்யாவுக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் இடையே கிட்டத்தட்ட 2.5 வருடங்களாக நடந்து வந்தது', இவ்வாறு பேசினார்.