< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - வைரலாகும் போஸ்டர்
|25 Jun 2022 10:25 PM IST
இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'.
சென்னை,
இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.
இந்த நிலையில் கார்கி படக்குழுவுடன் சூர்யா, ஜோதிகா எடுத்துள்ள புகைப்படம் தற்போது வரைலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, "கார்கி குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கார்கி திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.