சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தேதி வெளியானது
|சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17-ம் தேதி துவங்கவுள்ளது.
சென்னை,
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக்களத்தில் படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம். இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
இது சூர்யாவின் 44-வது படமாகும். அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்தது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
சூர்யாவின் 44 ஆவது படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க்வுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17-ம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.