'சூர்யா 44': படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே
|சூர்யாவின் 44-வது படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்
சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தநிலையில், தற்போது சூர்யாவின் 44-வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி நடைபெற்று முடிந்தது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.