கார்த்திக் சுப்புராஜின் 'சூர்யா 44' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
|கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், 'சூர்யா 44' படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி, வருகிற 23-ந் தேதி சூர்யாவின் 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தளிக்க 'சூர்யா 44' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அந்தமானில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுக்கான 2 பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சில சண்டைக்காட்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.