< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நாயகனாக சூரி
சினிமா செய்திகள்

மீண்டும் நாயகனாக சூரி

தினத்தந்தி
|
20 Sept 2023 8:01 AM IST

நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாகி உள்ளனர். அந்த வரிசையில் சூரியும் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை' படம் மூலம் நாயகனானார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இன்னொரு படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தை துரை செந்தில் குமார் டைரக்டு செய்கிறார். இதில் சசிகுமார், உன்னிமுகுந்தன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரேவதி சர்மா, ஷிவதா நாயர் ஆகியோர் நாயகிகளாக வருகிறார்கள். சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இயக்குனர் வெற்றி மாறன் கதை எழுதுகிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். கே.குமார் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக உருவாகிறது.

மேலும் செய்திகள்