< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டேவுக்கு அறுவை சிகிச்சை
|30 Aug 2023 10:34 AM IST
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு சமீபகாலமாக தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க இருந்த வாய்ப்பு பறிபோனது. சில படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது புதிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டார்.
புதிய படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு அவரது உடல்நிலைதான் காரணம் என்ற பேச்சும் உள்ளது. இந்த நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெலுங்கு இணைய தளங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
ராதே ஷியாம், பீஸ்ட் படங்களில் நடித்தபோதே பூஜா ஹெக்டே கால் வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வலி அதிகமானதால் டாக்டர்கள் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இதனாலேயே புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.