< Back
சினிமா செய்திகள்
சன்னி லியோன் படத்திற்கு சிறுவர்கள் தனியாக செல்லக்கூடாது...! யு/ஏ சான்றிதழ்
சினிமா செய்திகள்

சன்னி லியோன் படத்திற்கு சிறுவர்கள் தனியாக செல்லக்கூடாது...! யு/ஏ சான்றிதழ்

தினத்தந்தி
|
21 Dec 2022 11:53 AM IST

சன்னிலியோன் பேயாக மிரட்டும் காட்சிகளும், அரண்மனையில் ராணியாக இருந்து எதிரிகளை கொன்று குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

சென்னை

வடகறி என்ற படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய சன்னிலியோன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஓ மை கோஸ்ட்' என்ற பேய் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சரித்திர பின்னணி கொண்ட கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இதில் ராணியாகவும், பேயாகவும் இரு தோற்றங்களில் சன்னிலியோன் வருகிறார்.

சதீஷ், யோகிபாபு, திலக் ரமேஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா ஆகியோரும் உள்ளனர். கே.வீரசக்தி, சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை யுவன் இயக்கி உள்ளார்.

படத்தின் டிரைய்லர் வெளியாகி உள்ளது. அதில் சன்னிலியோன் பேயாக மிரட்டும் காட்சிகளும், அரண்மனையில் ராணியாக இருந்து எதிரிகளை கொன்று குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

தற்போது இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் படத்திற்கு தனியாக செல்லக்கூடாது. பெற்றோர்களின் அனுமதியுடன் செல்ல வேண்டும். காமெடி திரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.


மேலும் செய்திகள்