< Back
சினிமா செய்திகள்
அவர்கள் முன்னால் ஆட மாட்டேன் கவர்ச்சி நடனத்துக்கு சன்னி லியோன் நிபந்தனை
சினிமா செய்திகள்

அவர்கள் முன்னால் ஆட மாட்டேன் கவர்ச்சி நடனத்துக்கு சன்னி லியோன் நிபந்தனை

தினத்தந்தி
|
20 Oct 2022 9:04 AM IST

சன்னிலியோன் படப்பிடிப்பில் கவர்ச்சியாக ஆட நிபந்தனை விதித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

இந்தியில் கவர்ச்சி நடனங்கள் ஆடி பிரபலமான சன்னிலியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி படங்களில் அரைகுறை ஆடையில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சக கவர்ச்சி நடிகைகள் சன்னி லியோனை படங்களில் ஒப்பந்தம் செய்ய கூடாது என்று குரல் எழுப்பி வருகிறார்கள். அதையும் மீறி அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.

இந்த நிலையில் படப்பிடிப்பில் கவர்ச்சியாக ஆட சன்னிலியோன் நிபந்தனை விதித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் தொடர்ந்து படங்களில் குத்துப்பாடல்களில் கவர்ச்சியாக ஆடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் சின்ன பிள்ளைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன்.

குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சி இருக்கும். அப்போது சுற்றிலும் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவரோடு சேர்ந்து எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவேன்" என்றார்.

மேலும் செய்திகள்