சன்னி லியோனுக்கே இந்த நிலைமையா...? புலம்பும் கவர்ச்சி புயல்...!
|நடிகை சன்னி லியோன் என்னதான் கூகுளில் தொடர்ந்து டாப் 1ல் தேடலில் இடம்பிடித்தாலும், ஒரு ஆடை நிறுவனமோ மேக்கப்ப சாதன நிறுவனமோ அவரை தங்களது விளம்பர படங்களில் நடிக்க அழைப்பதில்லை.
புதுடெல்லி
ஆபாச படங்களில் சன்னி லியோன் நடித்த காலத்தில் சர்வதேச அளவில் அவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. ஆபாசப் படங்களில் இருந்து விலகி பாலிவுட்டில் நீண்ட தூரம் வந்துவிட்டார் சன்னி லியோன். பாலிவுட் திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வழங்குவது = மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது வரை, லியோன் நடிகை தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக லட்சகணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தினார். ஷாருக்கானின் ராயீஸ் படம், நடிகர் ஜெய்யின் வடகறி உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் போட்டும் கலக்கினார்.
ஓ சொல்றியா மாமா படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்டதற்கு எல்லாம் பல ஆண்டுகள் முன்னாடியே நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்றால் அப்போதே அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பாலிவுட்டில் திடீரென இளம் கதாநாயகிகளே படு கவர்ச்சி உடைகளில் நடிக்க ஆரம்பித்ததும் சன்னி லியோனின் மார்க்கெட் பெருமளவில் சரியத் தொடங்கின.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் இந்தியாவின் ஆடை நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். ஆனால்,நடிகை சன்னி லியோன் என்னதான் கூகுளில் தொடர்ந்து டாப் 1ல் தேடலில் இடம்பிடித்தாலும், ஒரு ஆடை நிறுவனமோ மேக்கப்ப சாதன நிறுவனமோ அவரை தங்களது விளம்பர படங்களில் நடிக்க அழைக்கவில்லை.
தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினாலும், நடிகை அதிக பாகுபாட்டை எதிர்கொள்கிறார். இப்படியொரு கவர்ச்சி தேவதையை ஒரு சில காரணங்களுக்காக கண்டு கொள்ளாமல் அப்படியே இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது நடிகைக்கு ரொம்பவே மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது தொடர்பாக பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும், பிரபல பிராண்டுகள் தங்கள் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பாததால், நடிகை பல நிராகரிப்புகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ச்சன்னிலியோன் கூறியதாவது;-
"நிச்சயமாக, எல்லோரும் ஏதாவது நிராகரிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் அப்படி உணர விரும்பவில்லை, அது உங்களை நாளை பாதிக்கிறது, ஆனால் நாளை நடக்கும். யாராவது அதை உங்களுக்குக் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் வெளியே சென்று அதைப் பெறுங்கள். உங்களையும் உங்கள் தொழிலையும் எப்படி திருப்திப்படுத்தப் போகிறீர்கள்.
"என்னை விளம்பரப் படத்தில் நடிக்க வைக்கும் மேக்கப் சாதன நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. அது வலிக்கிறது.பிறகு என்ன செய்வது? நான் எனது சொந்த மேக்கப் சாதன நிறுவனம் மற்றும் எனது சொந்த ஆடை நிறுவனத்தை உருவாக்கினேன்.
சர்வதேச அளவில், கிம் கர்தாஷியன், கைலி ஜென்னர் உள்ளிட்ட பலரும் இதே போன்ற பிசினஸை செய்து தான் கொடிகட்டி பறக்கின்றனர். இந்தியாவிலும் கத்ரீனா கைஃப் தனது அழகு சாதன நிறுவனத்தை ஆரம்பித்து நயன்தாராவை எல்லாம் விளம்பரத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.