மலையாள படம்: படப்பிடிப்பை தொடங்கிய சன்னி லியோன் - வீடியோ வைரல்
|நடிகை சன்னி லியோன் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார்.
திருவனந்தபுரம்,
பிரபல நடிகை சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.
இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சன்னி லியோன் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் தொடங்கி உள்ளனர். இந்த வீடியோவை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சன்னி லியோன் தேங்காய் மீது கற்பூரம் வைத்து தீ பற்ற வைத்து பூஜையை தொடங்கி வைக்கிறார். அப்போது அவரது கையை தீ சுடுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில், இந்த அற்புதமான மலையாள படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இறுதியில் என் கையை எரித்துக்கொண்டேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.