< Back
சினிமா செய்திகள்
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - வைரலான புகைப்படம்

image courtecy:instagram@sunnyleone

சினிமா செய்திகள்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - வைரலான புகைப்படம்

தினத்தந்தி
|
14 May 2024 9:12 AM IST

பிறந்தநாளை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சென்னை,

பிரபல நடிகை சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

இவர் தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவருக்கு 43-வது பிறந்தநாள். அதனை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கேக்கில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரென் என்று எழுதப்பட்டிருந்தது. ஏனென்றால், கரெஞ்சித் கவுர் வோரா என்பது சன்னிலியோனின் உண்மையான பெயராகும்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்