'அவர் தன்னை நேசிக்கவில்லை' - அரிஜித் சிங்கின் வெற்றி குறித்து பகிர்ந்த பிரபல பாடகி
|பாலிவுட்டில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சுனிதி சவுகான்.
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி பாடகியாக இருப்பவர் சுனிதி சவுகான். இவர் பாடகர் அரிஜித் சிங் உள்பட பல திறமையான கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், பாடகி சுனிதி சக பாடகர் அரிஜித் சிங்கை பாராட்டி பேசியுள்ளார். அரிஜித் சிங் குறித்து அவர்,
'அவர் வரம் வாங்கி வந்த பாடகர். மற்றவர்களின் பாடல்களை பாடும்போது கூட ரசிகர்களை அது அவர் பாடல் என்று உணர வைக்கும் அளவிற்கு சிறந்த பாடகர். அரிஜித் சிங் இவ்வளவு உயரம் வந்த பின்னும் பெருமை கொள்ளவில்லை. அவர் தன்னை போதுமான அளவிற்கு நேசிக்கவில்லை என்று நினைக்கிறேன். இதனால்தான் அவர் இதையெல்லாம் செய்ய முடிகிறது. அவர் தன்னை அரிஜித் சிங் என்று எண்ணாமல் ஒரு மாணவராக உணர்கிறார், என்றார்
மேலும் அவர், அரிஜித் சிங் எப்போதும் நிதானமாக இருப்பவர் என்றும் மற்றவர்கள் பாடிய பாடலை அடிக்கடி கேட்பார் என்றும் கூறினார். அரிஜித் சிங் மற்றும் சுனிதி சவுகான் இருவரும் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'தில்லிவாலி ஜாலிம் கேர்ள் பிரெண்ட்' படத்தில் வரும் 'ஜானிப்' பாடலையும் 2013-ம் ஆண்டு வந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் வரும் 'காஷ்மீர் மெயின் து கன்னியாகுமரி' பாடலையும் பாடியுள்ளனர்.