சுந்தர் சி - வடிவேலு இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
|சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. இப்போது காமெடி சேனல்களில் இந்தக் கூட்டணியின் காமெடி பிராதன இடத்தை தினமும் பிடிக்கும். 15 ஆண்டுகளாக இந்தக் கூட்டணி இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சுமார் 90 சதவீதம் வரை முடிவடைந்துவிட்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது. சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் உருவான வின்னர், தலைநகரம், நகரம் போன்ற படங்களின் காமெடிக் காட்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் உயிர்ப்போடு இருப்பவை. அந்த வரிசையில் இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.