< Back
சினிமா செய்திகள்
தலைநகரம் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சுந்தர்.சி..!
சினிமா செய்திகள்

'தலைநகரம் 2' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சுந்தர்.சி..!

தினத்தந்தி
|
21 Aug 2022 10:08 PM IST

'தலைநகரம் 2' படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சுந்தர்.சி தொடங்கியுள்ளார்.

சென்னை,

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வி.இசட். துரை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வடிவேலு, யோகி பாபு, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'தலைநகரம் 2' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சுந்தர்.சி தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்