சுந்தர்.சி நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் வெளியீடு
|சுந்தர்.சி நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'ஒன் 2 ஒன்'. இந்த படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவிவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சி.எஸ். பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தின் முதல் பாடலான 'சிங்கம் சிறுத்தை' என்ற பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர்.சி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் ஆர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.