மீண்டும் நாயகனாக சுந்தர்.சி
|டைரக்டர் சுந்தர்.சி கதாநாயகனாகவும் நடிக்கிறார். அரண்மனை உள்ளிட்ட படங்களில் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் மீண்டும் தனி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை வி.இசட். துரை டைரக்டு செய்துள்ளார்.
பட நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது, "தலைநகரம் 2-ம் பாகத்தை எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் இயக்குநர் துரை கேட்டபோது உடனே சம்மதித்தேன். அவரின் 'இருட்டு' படம் அருமையான திரைக்கதை. அந்தப் படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போது அந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை.
ஒரு படத்தின் வெற்றியை கொண்டாட வேண்டும் என்பது இப்போதுதான் தெரிகிறது. இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீசாகி முதல் ஷோ ஓடினதும் வெற்றி விழா கொண்டாடி விருந்து வைத்துகொள்கிறார்கள். இனிமேல் நாமும் அதை செய்ய வேண்டும். சினிமா தற்போது மாறிவிட்டது. நாம் எடுக்கும் கன்டென்ட்டை நோக்கி கொண்டு போனாலே படம் ஜெயிக்கும். 'அரண்மனை' போல் தலைநகரம் படமும் எனக்கு அடுத்தடுத்த பாகங்கள் கொண்ட படமாக அமையும் என நம்புகிறேன்" என்றார்.