< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்புக்கு பல மைல் தூரம்... பொருட்களை தோளில் சுமந்து சென்ற சுனைனா
சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு பல மைல் தூரம்... பொருட்களை தோளில் சுமந்து சென்ற சுனைனா

தினத்தந்தி
|
20 Jun 2023 11:36 AM IST

தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபல நடிகையாக உயர்ந்த சுனைனா சமீப காலமாக கதை, கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது நடிப்பை தாண்டி ரெஜினா படப்பிடிப்பில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு படக்குழுவினரை நெகிழ வைத்துள்ளது.

ரெஜினா படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடுபுழாவில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்தது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடந்தே சென்றனர். சுனைனாவும் தான் கொண்டு வந்த பொருட்கள் அடங்கிய பையை தோளில் சுமந்தபடி படக்குழுவினருடன் சேர்ந்து மலைப்பகுதியில் நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு பொருட்களை சுமந்தபடி நடந்தே சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சுனைனாவின் அர்ப்பணிப்பை படக்குழுவினர் பாராட்டி வருகிறார்கள். ரெஜினா படத்தை டொமின் டி.சில்வா டைரக்டு செய்துள்ளார். சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்