< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பல வருடங்களாக தள்ளிப்போன 'சுமோ' படம் - வெளியானது ரிலீஸ் அப்டேட்
|23 Sept 2024 9:19 PM IST
'சுமோ' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இயக்குனர் ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டே இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில்,'சுமோ' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
.