< Back
சினிமா செய்திகள்
வந்தாச்சு கோடை..! ஹாட்டோ...! ஹாட்டு...! அள்ளும் கவர்ச்சியில் ஆண்ட்ரியா...!
சினிமா செய்திகள்

வந்தாச்சு கோடை..! ஹாட்டோ...! ஹாட்டு...! அள்ளும் கவர்ச்சியில் ஆண்ட்ரியா...!

தினத்தந்தி
|
22 Feb 2023 4:12 PM IST

ஆண்ட்ரியா கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய்க்கு வந்தப்படி கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

சென்னை

முன்னணி நடிகையாக உள்ள ஆண்ட்ரியா, பிசாசு 2, கா, மாளிகை, நோ என்ட்ரி உள்ளிட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.ஆண்ட்ரியா நடிப்பில் கடைசியாக அனல் மேலே பனி துளி படம் வெளியானது. இதில் மதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் .

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் ஆண்ட்ரியா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய் பிளந்துள்ளனர். அந்த போட்டோவில் மினி டிரவுஸர் மற்றும் சிறிய மேலாடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த போட்டோவுக்கு Summer is here என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் நீங்கள் சம்மரை விட ஹாட் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இன்னும் சம்மர் முழுவதுமாக ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என்றும் கேட்டு வருகின்றனர்.

மேலும் பல நெட்டிசன்கள் ஹாட்னஸ் ஓவர் லோடட் என்றும், இது பிகினியா என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சில போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என்றும் ஆண்ட்ரியாவிடம் கெஞ்சி வருகின்றனர்.



தனது கேரியரை பாதித்த அனிருத் ரவிச்சந்திரனுடனான அந்தரங்க காட்சிகள் - ஆண்ட்ரியா

சென்னை

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைகிறார். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

'அன்னயும் ரசூல்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். நடிகர் மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியாதான் ஹீரோயின். நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமானபோது இசை அமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சுசி லீக்ஸ் ஆண்ட்ரியா மற்றும் அனிருத்தின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் காதல் முறிந்தது. காதல் முறிவு குறித்து ஆண்ட்ரியா வாய் திறக்கவில்லை என்றாலும் வயது வித்தியாசத்தால் காதல் முறிந்ததாக அனிருத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அனிருத்தை விட ஆண்ட்ரியா மூத்தவர்.

19 வயதாகும் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுடனான அந்தரங்க காட்சிகள் தனது கேரியரை பாதித்ததாக ஆண்ட்ரியா கூறி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், திருமணமான ஒரு பிரபலத்துடன் தனக்கு காதல் இருப்பதாகவும் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அந்த உறவில் இருந்து தான் பதற்றத்தை உணர்ந்ததாகவும், ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாகவும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ஆனால் திருமணமான பிரபலம் யார் என்பதை ஆண்ட்ரியா வெளியிடவில்லை.

காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதியா? ஆண்ட்ரியா விளக்கம் காதல் என்ற பெயரில் பல இன்னல்களை சந்தித்த நடிகை ஆண்ட்ரியா, இந்த ஆண்டு காதலர் தினத்தை கருப்பு தினமாக கொண்டாடினார். இந்நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற ஆடை அணிந்து போட்டோஷூட் செய்து தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தான் தனிமையில் இருப்பதாக ஆண்ட்ரியா சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழ்நாட்டின் சென்னையில் ஆங்கிலோ-இந்திய ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஆண்ட்ரியாவுக்கு ஒரு தங்கை இருக்கிறார், அவர் பெல்ஜியத்தின் லுவெனில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிகிறார்.

ஆண்ட்ரியா அலெக்ஸாண்ட்ரியாவில் வளர்ந்தார் மற்றும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்றார். எட்டாவது வயதிலிருந்தே கிளாசிக்கல் பியானோ கற்கத் தொடங்கினார். 10 வயதில் ஜாக்சன் பைவ்-ஸ்டைல் இசைக் குழுவான "யங் ஸ்டார்ஸ்" இல் சேர்ந்து பாடி வந்தார்.

எட்டாவது வயதிலிருந்தே கிளாசிக்கல் பியானோ கற்கத் தொடங்கினார். 10 வயதில் ஜாக்சன் பைவ்-ஸ்டைல் இசைக் குழுவான "யங் ஸ்டார்ஸ்" இல் சேர்ந்தார்,

கவுதம் மேனன் இயக்கிய "வேட்டையாடு விளையாடு" படத்தில் ஒரு பாடலைப் பாடினார். பின்னர் அவர் "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் நடித்தார்.

பாடகியாக வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவுக்கு வந்த ஆண்ட்ரியா, நடிக்க தொடங்கினார். ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத்,ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "மாலை நேரம்" பாடலை தான் இதுவரை பாடியதிலேயே மிகவும் சவாலான பாடல் என்று ஆண்ட்ரியா கூறி உள்ளார்.



மேலும் செய்திகள்