பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேரனை காதலிக்கும் ஷாருக்கான் மகள்...!
|அமிதாப்பச்சனின் மகளின் மகன் ஷாருக்கானின் மகளை காதலித்து வருகிறார் என பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது.
மும்பை
பாலிவுட்டின் புதிய தலைமுறை நட்சத்திரக் குழந்தைகளான ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாபச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா காதல் வதந்தியில் சிக்கி உள்ளனர்.
ஜோயா அக்தரின் அமெரிக்க காமிக் புத்தகமான தி ஆர்ச்ஸில் இருவரும் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நேரத்தில் அவர்களது காதல் குறித்த வதந்திகள் வந்துள்ளன.
சுஹானாவும் அகஸ்தியாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், தற்போது இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில், அகஸ்தியா கபூர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் விருந்திற்கு சுஹானா கானை தனது குடும்பத்தைச் சந்திக்க அழைத்துச் சென்றதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
அகஸ்திய நந்தாவின் தாயார் ஸ்வேதா பச்சனுக்கு சுஹானாவை பிடித்து விட்டதாகவும் நட்சத்திரக் குழந்தை ஜோடிக்கு ஸ்வேதா தனது சம்மததை தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சுஹானா மற்றும் அகஸ்தியாவைத் தவிர, தி ஆர்ச்ஸில் பல நட்சத்திரக் குழந்தைகள் றிமுகமாகின்றனர். கதையில் மிஹிர் அஹுஜா, ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர், வேதாங் ரெய்னா, அதிதி டாட் மற்றும் சந்தனா ரோச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியாகும்.