< Back
சினிமா செய்திகள்
இயக்குநர் சுதா கொங்கரா படத்தில் நடிகர் துருவ் விக்ரம்?
சினிமா செய்திகள்

இயக்குநர் சுதா கொங்கரா படத்தில் நடிகர் துருவ் விக்ரம்?

தினத்தந்தி
|
25 April 2024 4:19 PM IST

இயக்குநர் சுதா கொங்கரா புதிய கதை ஒன்றை நடிகர் துருவ் விக்ரமிற்கு சொல்லி இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. ஆனால், 'சூரரைப் போற்று' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் பெரிய திரையில் அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை. சூர்யாவுடன் மீண்டும் அவர் இணையும் 'புறநானூறு' படம் அறிவிக்கப்பட்ட போதும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் படம் கைவிடப்பட்டதா என்றும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 'புறநானூறு' படத்தின் கதைக்கு மறுவடிவம் கொடுப்பதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால் படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில்தான் சுதா கொங்கரா துருவ் விக்ரமுக்கு புதிய கதை ஒன்றை சொல்லியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்திருந்தாலும் இன்னும் துருவ் விக்ரம் படத்தை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது.

துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா கதையை உறுதி செய்தால் மாரி செல்வராஜ் படத்திற்கு அடுத்து இதில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்