படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா..!
|சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.
தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுதா கொங்கரா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். கையில் காயங்களுடன் இருக்கும் சுதா பதிவிட்டிருப்பது, சிறந்த வலி. சிறந்த எரிச்சலூட்டும்! ஒரு மாத இடைவெளியில்! இது நான் விரும்பிய இடைவேளை அல்ல என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், விரைவில் குணமடையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Super painful. Super annoying! On a break for a month #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023