மஞ்சுமெல் பாய்ஸ்: திரையரங்கில் பயங்கரமான அனுபவம் - கவுதம் மேனன் பாராட்டு
|கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கவுதம் மேனன் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம், சினிமாவை ஒரு மாயாஜாலத்தோடு இணைந்த படம், மிகச்சிறப்பாக படத்தை எடுத்துள்ளனர்.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல" என்ற பாடல் வந்தபோது நான் முதன்முதலில் குணா படம் பார்த்தது என் நினைவுக்கு வந்தது என கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதை கரு ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைகளமாகும்.