< Back
சினிமா செய்திகள்
வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்... தென்னிந்திய சினிமாவை சாடிய பிரபல நடிகை
சினிமா செய்திகள்

வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்... தென்னிந்திய சினிமாவை சாடிய பிரபல நடிகை

தினத்தந்தி
|
15 Jun 2023 11:16 AM IST

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் அவிகா கவுர். இவர் முதலில் உய்யல ஜம்பாலா என்ற தெலுங்கு படத்தில்தான் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தோல்வி அடைந்ததால் மும்பைக்கு குடிபெயர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளது என்று அவிகா கவுர் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தி சினிமா துறையை விட தென்னிந்திய திரையுலகில்தான் வாரிசுகள் ஆதிக்கம் அதிகம். இந்தி படங்கள் மீது தென்னிந்திய திரையுலகினர் பாரபட்சம் காட்டுகிறார்கள். பல தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன. அந்த படங்களை வட இந்திய ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் இந்தி படங்களை பார்க்க விரும்புவது இல்லை.

தெலுங்கு திரையுலகம் முழுமையாக வாரிசு நடிகர்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. பெரிய நடிகர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் நடிகர்களாக முடியும். அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறலாம்' என்றார். அவிகா கவுர் கருத்துக்கு தென்னிந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்