< Back
சினிமா செய்திகள்
இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் - நடிகை நீது சந்திரா ஆதங்கம்
சினிமா செய்திகள்

இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் - நடிகை நீது சந்திரா ஆதங்கம்

தினத்தந்தி
|
4 April 2023 7:23 AM IST

இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாகவும், வெளியில் இருந்து வருபவர்களை வளர விடாமல் அவர்கள் தடுப்பதாகவும் ஏற்கனவே பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தி பட உலகில் என்னை ஓரம்கட்ட ஒரு கும்பல் சதி செய்தது. அவர்கள் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனாலேயே இந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு போனேன்'' என்றார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்பானது. பிரியங்கா கருத்துக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இந்தி பட உலக வாரிசுகள் ஆதிக்கத்தை கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, "இந்த பிரச்சினை ஒருவருக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே இதே நிலைமைதான் இருக்கிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை என்றால் பட வாய்ப்புக்காக போராட வேண்டும். ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலும் அது நீண்ட கால தாமதத்துக்கு பிறகே கிடைக்கும்.

இதை பிரியங்கா உள்பட பலர் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி பகிரங்கமாக பேச யாரும் முன் வருவது இல்லை'' என்றார்.

மேலும் செய்திகள்