சுபிக்ஷாவின் சமூக சேவை
|வீட்டின் அருகில் இருக்கும் ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் சுபிக்ஷா.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சுபிக்ஷா கிருஷ்ணன் `கடுகு', `கோலிசோடா 2', `பொது நலன் கருதி', `நேத்ரா', `வேட்டை நாய்', `கண்ணை நம்பாதே' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். லாரன்சின் `சந்திரமுகி 2' படத்திலும் நடித்துள்ளார்.
சுபிக்ஷா கிருஷ்ணன் கூறும்போது, ``சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு `சந்திரமுகி 2' படத்தில் பலித்துள்ளது. இதில் துணிச்சலான பெண்ணாக வருகிறேன். இதே போன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்.
எனக்கு சமூக நலனில் அக்கறை உண்டு. வாரந்தோறும் என் வீட்டின் அருகில் இருக்கும் ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறேன். வெளியூருக்கு சென்றால் கூட என் அம்மா மூலம் அவர்களுக்கு உணவு வழங்குகிறேன். இது போல் ஆதரவற்றோருக்கு பலரும் உதவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்'' என்றார்.