"படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி..." - வெளியானது 'வாத்தி' டீசர்..!
|நடிகர் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 'வாத்தி' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில் தனுஷ், பாரதியார் போல வேடமணிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.