< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

"பயில்வான்.. எல்லை மீறி போறீங்க..!! எச்சரித்த பாடகி சுசித்ரா...!

தினத்தந்தி
|
6 Jun 2022 4:44 PM IST

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய போது பயில்வான் ரங்கநாதன், பிரபல பின்னணி பாடகி சுசித்திரா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த பாடகி சுசித்திரா, பயில்வான் ரங்கநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில்:-

சுசித்ரா: உங்களுடைய லேட்டஸ்ட் வீடியோ பார்த்தேன். அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்களே? இதற்கு உங்ககிட்டே எதாவது ஆதாரம் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: அப்படிலாம் சொல்லவில்லையே

சுசித்ரா: இல்ல சொல்லியிருக்கீங்க அந்த வீடியோவ இப்ப அனுப்புறேன். அந்த மாதிரிலாம் யாராவது சொல்ல சொல்லி சொன்னீங்காளா? இல்ல உங்ககிட்டே ஆதாரம் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: அதுல நான் எழுதிக் கொடுத்ததை தான் பேசியிருப்பேன்னு நினைக்கிறேன், நீங்க உங்க கருத்தை சொல்லுங்கள் அதையும் பதிவு செய்து விடுகிறேன்

சுசித்ரா: எனக்கு கருத்து எல்லாம் கிடையாது, என்னை பற்றி மிகவும் அசிங்கமாக பேசி உள்ளீர்கள் ஆபாசமாக பேசி இருக்கீங்க,

பயில்வான் ரங்கநாதன்: இல்ல, அது அந்த சமயத்தில நீங்கள் போதைக்கு அடிமையாகி இருந்தது தொடர்பாக பத்திரிகையில் செய்தி வந்தது

சுசித்ரா: இல்லை நீங்கள் லேட்டஸ்டா ஒரு வீடியோ போட்டிருக்கீங்க, தனுஷ் விவாகரத்து தொடர்பான வீடியோ, அதுல மறுபடியும் குத்தி கிளறியிருக்கீங்க, சுசித்ராவ பத்தினு முதல் பத்து நிமிடங்கள் என்னை பற்றி பேசிருக்கீங்க. உங்களுக்கு ஞாபகம் இல்லையா? சரி அந்த வீடியோவை அனுப்புறேன் நான். அதுல நீங்க சுசித்ரா முழுப் பைத்தியம், ஹோட்டல்ல போயி கத்து கத்துனு கத்துவாங்க, கார்த்திக் குமார் பாவம், அவர்தான் காப்பாற்றினார். அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. இருந்தாலும் அவங்க முழு பைத்தியம் ஆயிட்டாங்க. அப்படிலாம் சொல்லியிருக்கீங்க. இதுக்கு உங்ககிட்ட எதாவது ஆதாரம் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: கார்த்திக்கின் பேட்டி பத்திரிக்கையில் வந்தது அதை வைத்து தான் நான் பேசினேன்,

சுசித்ரா: இல்லை, சுசித்ரா பற்றி மொத்தமா நீங்க உங்க சொந்த கருத்தத்தான் சொல்லிருக்கீங்க இல்லையா?

பயில்வான் ரங்கநாதான்: இல்லை என் கருத்து இல்லை. உங்க வீட்டுக்காரர் சொன்னதைத்தான், இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் பண்ணேன். என்னால சமாளிக்க முடியல, அதான் விவாகரத்து பண்ணேன். அப்படினு அவர் சொல்லியிருக்கார், அதைத்தான் சொன்னேன்.

சுசித்ரா: அத நீங்க அவருக்கு சாதகமா சொல்லிருக்கீங்க இல்லையா, என்னை மொத்தமா பைத்தியம்னு நீங்களும் சொல்லிட்டீங்க இல்லையா?

பயில்வான் ரங்கநாதன்: அவர் சொன்ன தகவலைத்தான் நான் சொன்னேன்.

சுசித்ரா: உங்க தகவல், நான் உங்களுக்கே அந்த வீடியோவ அனுப்புறேன். ரொம்ப எல்லை மீறி போயிட்டீங்க நீங்க. ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க நீங்க...

இப்படி அந்த ஆடியோ தொடர்கிறது.

மேலும் செய்திகள்