< Back
சினிமா செய்திகள்
சவால்களுடன் போராடுகிறேன் - நடிகை சமந்தா
சினிமா செய்திகள்

சவால்களுடன் போராடுகிறேன் - நடிகை சமந்தா

தினத்தந்தி
|
5 Dec 2022 12:48 PM IST

தற்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினையில் இருந்து மீள்வேன் என்கிறார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோய் பாதிப்பு தனக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். தற்போது வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். விரைவில் உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக தகவல்.

சமந்தா அளித்துள்ள பேட்டியில், ''எத்தனையோ போராட்டங்களில் ஜெயித்த நான் தற்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினையில் இருந்தும் மீள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில நல்ல நாட்கள் இருக்கும் சில கெட்ட நாட்களும் இருக்கும். அடுத்து இதற்கு மேல் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது போல இருக்கிறது என நான் பயந்த சந்தர்ப்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. தினமும் நிறைய பேருக்கு எத்தனையோ சவால்களுடன் போராட வேண்டி இருக்கும். நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஒரு முறை எதையாவது முடிவு செய்தால் அதை செய்தே தீருவேன். ஒரு கதாபாத்திரத்தில் உயிரை கொடுத்து நடிக்கும் பொழுது சொந்த குரல் கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால்தான் ஆஸ்பத்திரியில் இருந்த போதும்கூட டப்பிங் நானே பேசினேன்'' என்றார்.

மேலும் செய்திகள்