< Back
சினிமா செய்திகள்
அமலாபாலுக்கு வலுக்கும் கண்டனங்கள்
சினிமா செய்திகள்

அமலாபாலுக்கு வலுக்கும் கண்டனங்கள்

தினத்தந்தி
|
18 Sept 2022 7:40 AM IST

தெலுங்கு சினிமாவை விமர்சித்து அமலாபால் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

சமீபகாலமாக அமலா பாலை சுற்றி சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. அவர் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் அங்கு பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தெலுங்கு சினிமா குறித்தும் சில கருத்துகளை அவர் முன்வைத்து பேசினார். அதில், "தெலுங்கு திரையுலகுக்கு நான் சென்ற போது, அங்கு கமர்ஷியல் படங்களே ஆட்சி செய்வதை அறிந்தேன். பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகளின் தேவை இருக்கிறது. மேலும் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.எப்போதும் 2 கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே கவர்ச்சியாக இருந்தது. எனவே அந்த திரையுலகில் என்னை இணைத்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் தெலுங்கில் நான் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தேன். தற்போது நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

தெலுங்கு சினிமாவை விமர்சித்து அமலாபால் பேசிய பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

மேலும் செய்திகள்