< Back
சினிமா செய்திகள்
சிவசக்தியாக தமன்னா... இணையத்தை கலக்கும் ஒடேலா - 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்
சினிமா செய்திகள்

சிவசக்தியாக தமன்னா... இணையத்தை கலக்கும் 'ஒடேலா - 2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

தினத்தந்தி
|
8 March 2024 4:48 PM IST

'ஒடேலா - 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காசியில் தொடங்கியது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான 'ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்' திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான இந்த கிரைம் திரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'ஒடேலா - 2' என்ற பெயரில் உருவாகிறது.

'ஒடேலா - 2' படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இந்த படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் மது தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹெபா பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காசியில் தொடங்கியது. இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சிவசக்தி என்ற நாகசாது கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கோலும் மற்றொரு கையில் உடுக்கையுமாக தமன்னா இடம்பெற்றுள்ள இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்