விஜய் ஆண்டனியுடன் இணைந்த தெருக்குரல் அறிவு
|'ரத்தம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 'ரத்தம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.