பட புரோமோசன் விழாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷ்ரத்தா கபூர் - வீடியோ வைரல்
|'ஸ்ட்ரீ 2' படத்தின் புரோமோசன் பணிகளில் தற்போது ஷ்ரத்தா கபூர் ஈடுபட்டு வருகிறார்.
மும்பை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
வருண் தவான், பிரபுதேவாவுடன் ஸ்ட்ரீட் டேன்சர் படத்தில் நடித்து இருந்தார். தற்போது 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோசன் பணிகளில் தற்போது ஷ்ரத்தா கபூர் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி, நேற்று நடந்த விழாவில் ரசிகை கொடுத்த ஜிலேபியை சாப்பிட்டு ரசிகைக்கும் ஊட்டிவிட்டார். பின்னர் புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரத்தா கபூரை பாராட்டி வருகின்றனர். அதன்படி, வெளியே போல உள்ளேயும் அழகான ஷ்ரத்தா கபூர், ரசிகர்களிடம் அவர் காட்டும் அன்பும் அர்ப்பணிப்பும் மனதைக் கவர்கிறது என்றும் அல்டிமேட் கிரஷ் மெட்டீரியல் என்றும் ஷ்ரத்தா கபூரை கூறி வருகின்றனர்.
ஷ்ரத்தா நடித்துள்ள 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.