< Back
சினிமா செய்திகள்
Stree 2 new song: Tamannaah Bhatias peppy number Aaj Ki Raat will steal your heart
சினிமா செய்திகள்

'ஸ்ட்ரீ 2' படத்தின் புதிய பாடல்: இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் நடனம்

தினத்தந்தி
|
24 July 2024 7:42 PM IST

'ஸ்ட்ரீ 2' படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

மும்பை,

ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்ட்ரீ'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'ஆஜ் கி ராத்' வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்