டிக்கெட் முன்பதிவில் 'பைட்டர், கல்கி 2898 ஏ.டி' படத்தின் சாதனையை முறியடித்த 'ஸ்ட்ரீ 2'
|'பைட்டர்' மற்றும் 'கல்கி 2898 ஏ.டி' ஆகிய படங்கள் டிக்கெட் முன்பதிவில் படைத்த சாதனையை முறியடித்த 'ஸ்ட்ரீ 2' படம்.
மும்பை,
ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்ட்ரீ'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகமான 'ஸ்ட்ரீ 2' படத்திலும் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. 'பைட்டர்' மற்றும் 'கல்கி 2898 ஏ.டி' ஆகிய படங்கள் டிக்கெட் முன்பதிவில் ரூ.22.5 கோடி வசூலித்தன. ஆனால் விடுமுறை நாளில் வெளியாகும் 'ஸ்ட்ரீ' படம் இந்தியாவில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை சுமார் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'பைட்டர்' மற்றும் 'கல்கி 2898 ஏ.டி' ஆகிய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே பாலிவுட்டில் கடைசியாக வெளியான 'ஆரோன் மே கஹான் தம் தா' மற்றும் 'உலாஜ்' ஆகிய படங்கள் டிக்கெட் முன்பதிவில் வசூலித்ததை விட, 'ஸ்ட்ரீ 2' படம் அதிக வசூல் செய்துள்ளது.
அக்ஷய் குமார் நடித்த 'கேல் கேல் மெயின்' படம் இதுவரை 2000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றுள்ளது, ஜான் ஆபிரகாம் நடித்த 'வேதா' படம் 6000 டிக்கெட்டுகள் விற்றுள்ளது. ஆனால் 'ஸ்ட்ரீ 2' படம் மட்டுமே இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிமான டிக்கெட்டுகள் விற்றுள்ளது. இந்த மூன்று படங்களும் ஒரே தேதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.