< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'ஸ்டார்' படத்தின் டிரெய்லர் வெளியானது - இணையத்தில் வைரல்
|27 April 2024 12:28 PM IST
'ஸ்டார்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. தற்போது ஸ்டார் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. ஸ்டார் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.