நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்
|நடிகர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடக்கின்றன. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக ஆர்யா உள்ளார். இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி ஆகியோர் விளையாடுகின்றனர்.
தெலுங்கு வாரியர்ஸ் அணி கேப்டனாக நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான அகிலும், கேரள ஸ்டிரைக்கஸ் அணியின் கேப்டனாக குஞ்சாக்கோ போபனும், கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப்பும், பஞ்சாப் தி ஷேர் அணி கேப்டனாக சோனுசூட்டும், பெங்கால் டைகர்ஸ் அணி கேப்டனாக கிசுசென் குப்தாவும், போஜ்புரி தபாங்ஸ் அணி கேப்டனாக மனோஜ் திவாரியும் விளையாடுகின்றனர். மார்ச் 19-ந்தேதி இறுதிப்போட்டி நடக்கிறது