< Back
சினிமா செய்திகள்
SS Rajamouli says, I Like Raavan More Than Lord Ram, admiring the character
சினிமா செய்திகள்

'ராமரை விட ராவணனை பிடிக்கும், ஏனென்றால்...'- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

தினத்தந்தி
|
6 Aug 2024 1:01 PM IST

ராவணன் மீதான தனது ஈர்ப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர். கடந்த 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் நாடு முழுவதும் பேசப்பட்டது.

இதன் பின் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தை இயக்கி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார். இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1,850 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1,350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

இந்நிலையில், ராவணன் மீதான தனது ஈர்ப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தபோது, பாண்டவர்கள் நல்லவர்கள், கவுரவர்கள் கெட்டவர்கள் என்று புத்தகங்களில் படித்தோம், அதே போல் புத்தகங்கள் ராமரை நல்லவனாகவும், ராவணனை கெட்டவனாகவும் சித்தரித்தன. நாம் வளர்ந்து அவர்களை பற்றி படிக்கும்போது, அது முற்றிலும் எதிர்மாறாகத் தெரிகிறது.

எனக்கு மிகவும் சக்திவாய்ந்த வில்லன்களை எப்போதும் பிடிக்கும். தோற்கடிக்க மிகவும் கடினமான ஒருவனாக வில்லன் இருக்க வேண்டும். அதன்படி, ராவணன் கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால், ராமரை விட ராவணனை எனக்கு மிகவும் பிடிக்கும்,'என்றார்.

மேலும் செய்திகள்