< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி - வைரலாகும் புகைப்படம்
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படப்பிடிப்பு தளத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி - வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
27 Sept 2024 10:04 AM IST

எஸ்.எஸ்.ராஜமவுலி 'புஷ்பா 2' படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி 'புஷ்பா 2' படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் சுகுமாருடன் எஸ்.எஸ்.ராஜமவுலி இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிரது.

மேலும் செய்திகள்