< Back
சினிமா செய்திகள்
சுருதிஹாசனின் வேண்டுதல் பதிவு
சினிமா செய்திகள்

சுருதிஹாசனின் வேண்டுதல் பதிவு

தினத்தந்தி
|
31 Jan 2023 8:26 AM IST

நடிகை சுருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாடிய தனது புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் சில வேண்டுதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் நிறைய அன்பை பெறுகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளில் சில முடிவுகளை எடுத்துக் கொள்வேன். இந்த ஆண்டு மட்டும் எனக்காக இல்லை. எல்லோருக்காகவும் வேண்டிக் கொண்டேன். எல்லோரும் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்க வேண்டும். அவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவரவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வயது ஏறுகிறது. அந்த அனுபவத்தில் புத்திசாலி ஆகிறோம். என்னை சுற்றி இருக்கும் உலகத்தில் எத்தனையோ புத்திசாலிகளுடன் இருப்பதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்